வறண்டு கிடந்த வைகை ஆற்றில் ஆர்ப்பரித்து ஓடும் தண்ணீர்.. மகிழ்ச்சியில் விவசாயிகள் | Vaigai River

Update: 2024-10-12 12:09 GMT
  • தேனி மாவட்டம் முழுவதும், குறிப்பாக வைகை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளான வருசநாடு உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மழை இன்றி வறண்டு, மணல் மேடாக காட்சியளித்த மூல வைகை ஆற்றில் நீர்வரத்து தொடங்கியது. மூல வைகை ஆற்றின் வறண்ட மணல் பரப்பில் பூமியை ஈரமாக்கியபடி தண்ணீர் வெண் நுரையுடன் தவழ்ந்து வந்தது. வறண்ட வைகை ஆற்றில் நீர் வருவதைக் கண்ட விவசாயிகளும் பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், இனி வரும் நாட்களில் வைகை ஆற்றில் வரும் தண்ணீர் படிப்படியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வைகை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளான வருஷநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்