மறைந்தும் 5 பேருக்கு வாழ்வளித்த இளைஞர்..! நேரில் சென்று அமைச்சர் மரியாதை... நெகிழ வைத்த சம்பவம்
- மூளைச்சாவு அடைந்த சென்னையைச் சேர்ந்த இளைஞரின் உறுப்புகள் 5 நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளித்துள்ளது...
- கடந்த 11ம் தேதி ராமபுரத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்ற 33 வயது இளைஞருக்கு வலிப்பு காரணமாக கீழே விழுந்து மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்ட நிலையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்...
- ஆனால் நேற்று அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில், இளைஞரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தார் ஒப்புக் கொண்டனர்...
- இதையடுத்து நுரையீரல், சிறுநீரகம், தோல் மற்றும் கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் 5 நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்படுகிறது. இளைஞரின் உறுப்புகளை அகற்றிய மருத்துவர்கள், தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.