நம்பி வேலை கொடுத்த முதலாளி - முதல் நாளிலேயே காட்டிய கைவரிசை-திருட்டு கும்பலுக்கு காத்திருந்த ட்விஸ்ட்

Update: 2023-11-03 15:15 GMT

தாராபுரம் அடுத்துள்ள மூலனூர் விநாயகா நகரை சேர்ந்தவர் செல்வராஜ். நிதி நிறுவன அதிபரான இவர், தமது பழைய வீட்டை சுத்தம் செய்ய ஒடிசா இளைஞர்களை அழைத்து வந்துள்ளார். சுத்தம் செய்வது போல் வீட்டை நோட்டமிட்ட ஒடிசா இளைஞர்கள், அன்றிரவு வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்ட நிலையில், பக்கத்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த செல்வராஜை, அறைக்குள் வைத்து பூட்டியிருக்கின்றனர். மறுநாள் காலை தன் அறையின் கதவு வெளிப்புறமாக தாழிடப்பட்டிருப்பதை அறிந்த செல்வராஜ், தனது நண்பரை போன் போட்டு அழைத்து கதவை திறந்த நிலையில், தன்னுடைய பழைய வீட்டிற்குள் கொள்ளையர்கள் வந்து சென்றதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். விசாரணையில், வீட்டிற்குள் இரவு புகுந்தது ஒடிசாவை சேர்ந்த கும்பல் என்பதும், வீட்டில் இருந்த பீரோவில் ஏதும் இல்லாத விரக்தியில் திரும்பி சென்றதும் தெரியவர, வீட்டை சுத்தம் செய்யும் பணிக்கு வந்த ஒடிசா இளைஞர்கள் 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்