மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையார் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட வீடுகளை, மழைநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு அளாகி உள்ளனர். ஒவ்வொரு முறையும் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதாக வேதனை தெரிவித்த மீனவ மக்கள், தற்காலிகமாக தண்ணீரை வெளியேற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். இதற்கு நிரந்தர தீர்வு காண முறையான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.