இந்தியாவிலேயே முதல்முறையாக காஞ்சிபுரத்தில் இருக்கும் பிரம்மாண்டம் - "ஒரே நாளிலே விருப்பத்திற்கு ஏற்ப தயாராகும் சேலை"
இந்தியாவிலேயே முதல்முறையாக காஞ்சிபுரத்தில் 24 அடி அகலம் கொண்ட பிரம்மாண்ட கைத்தறி அமைத்து பட்டு சேலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிப்பூர் பகுதியில் தமிழக அரசின் பட்டு பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு தற்கால தேவைக்கு ஏற்ப பல்வேறு வகையான பட்டு சேலைகள் நெசவு செய்யப்பட்டு வருகிறது. தற்போது இங்குள்ள நெசவு கூடத்தில் பிரம்மாண்ட கைத்தறியை அமைத்து, அதில் 24 அடி அகலமும், 5 அடி நீளம் கொண்ட "வாலாங்கி" பட்டுச்சேலை தயாரிக்கப்பட்டு வருகிறது. சாதாரணமாக பெண்கள் அணியும் ஒரு பட்டு சேலையை நெசவு செய்ய குறைந்தது 15 நாட்கள் வரை ஆகும். ஆனால் தற்போது இந்த பிரம்மாண்ட தறியில்
12 மணி நேரத்துக்குள் ஒரு சேலையை நெசவு செய்து விடலாம் என தெரிவிக்கும் ஊழியர்கள், பெண்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்கள் கேட்கும் நிறத்திலும், டிசைனிலும் சேலையை தயாரித்து வழங்கலாம் என பட்டு சேலை வடிவமைப்பாளர் குமரவேல் தெரிவித்தார்.