கோலம் போடும் கேப்ஃபிள் கழுத்துக்கு வந்த கை.. ஒரே பிடி.. கொத்தாக சிக்கிய 17 சவரன்
சிவகங்கை நகரின் மையப் பகுதியில் உள்ள வ.உ.சி வீதியில் வசித்து வருபவர்கள் கிருஷ்ணன் - ஆண்டாள் தம்பதி. வயதான தம்பதியான இவர்களது மகன், அதே பகுதியில் நகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், அதிகாலை வேளையில் மூதாட்டி ஆண்டாள், வீட்டு வாசலில் கோலம்போட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 17 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.