சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த 12 வயது சிறுவர் ஒருவர், சாலை விபத்து ஒன்றில் தனது தந்தையை பறிகொடுத்து, தாயுடன் வசித்து வந்திருக்கிறார். உடன் சிறுவனின்
தாய் மாமனும், தாத்தாவும் வசித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று சிறுவனின் தாய் மாமாவான மனோஜ் குமார் டிவி பார்த்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, தான் லேப்டாப்பில் கேம் விளையாடுவதை மாமா கண்டித்ததால் கோபத்தில் இருந்த சிறுவன், சட்டென டிவியை ஆஃப் செய்ததாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த மனோஜ்குமார் அருகில் இருந்த சுத்தியலால் சிறுவனின் தலையில் தாக்கிவிட்டு தப்பியோடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், தப்பியோடிய சிறுவனின் தாய்மாமா மானோஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.