தலைமை ஆசிரியர் வீட்டில் கொள்ளை - பறிபோன 40 பவுன் நகை
கடலூர் மாவட்டம், புவனகிரியை அடுத்துள்ளது கீரப்பாளையம் கிராமத்தில், வெல்கம் நகரில் வசித்து வருபவர் ராமமூர்த்தி. இவரது மனைவி மலர்விழி விருத்தாசலம் பகுதியில் உள்ள ஒரு அரசு
பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக விருதாச்சலத்தில் இவர்கள் தங்கியிருந்த நிலையில், கீரப்பாளையம் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புவனகிரி காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே கொள்ளை சம்பவம் நடந்த வீட்டிற்கு அருகே, பிரதான சாலையில் உள்ள குளிர்பான கடையின் பூட்டையும் நள்ளிரவில் உடைத்த மர்ம நபர்கள் சுமார் 50 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம்
குறித்தும் புவனகிரி காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.