கழிவு நீராகமாறும் கிணற்று தண்ணீர்... பாதிப்படையும் மக்களின் உடல்நிலை

Update: 2024-08-28 11:28 GMT

ராமநாதபுரம் காட்டுப் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் பாதாள சாக்கடை உடைப்பெடுத்து கழிவு நீர் வெளியேறி சாலையில் தேங்கியுள்ளது. கழிவுநீரை வெளியேற்றி, பாதாள சாக்கடை உடைப்பை சரி செய்யக்கோரி நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சுகாதார சீர்கேட்டால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும், நிலத்தடி நீர் மாசடைந்து கிணறுகளில் உள்ள தண்ணீரும் கழிவு நீராக மாறி வருவதாகவும் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்