கைக்குழந்தைகளோடு வீட்டின் முன் பெண்கள் எடுத்த முடிவு - திடீர் பரபரப்பு ... இறங்கிய போலீசார்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு, கை குழந்தைகளுடன் இரண்டு பெண்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
சேர்ந்தமரம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட வீரசிகாமணி நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவர் தனது இடத்தை விற்பதற்காக கூறி, இரண்டு பெண்களிடம் முன்பணம் வாங்கியுள்ளார். அந்த இடத்தில் சிக்கல் இருந்ததால் இரண்டு பெண்களும் முன்பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். முத்துலட்சுமி பணத்தை தராமல் இழுத்தடித்துள்ளார். இந்நிலையில் முத்துலட்சுமி வீட்டின் முன்பு இரண்டு பெண்களும் கைக்குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி இரண்டு பெண்களையும் அனுப்பி வைத்தனர்.