"என் புருசன கொன்னவனுக்கு...என் கண்முன்னே நடக்கணும்''..துண்டுச்சீட்டில் குலைநடுங்கும் வேண்டுதல்
தன் கணவரின் மரணத்திற்குக் காரணமானவர்களை காளியம்மன் தான் தட்டிக் கேட்க வேண்டும் என பெண் ஒருவர் காளியம்மன் கோவிலில் கடிதம் எழுதி உண்டியலில் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் பத்ரகாளியம்மன் கோவிலில் வீற்றிருக்கும் காளி தவறு செய்தவர்களை தட்டிக் கேட்பவள் என்று நம்பும் பக்தர்கள் இக்கோயிலில் காசு வெட்டிப் போடும் பழக்கமும் உண்டு... இந்நிலையில், இவ்வாலயத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது... 11 உண்டியல்களில் 32 லட்சத்து 69 ஆயிரத்து 315 ரூபாயும், 223 கிராம் தங்கமும், 283 கிராம் வெள்ளியும், கோசாலை உண்டியலில் 75 ஆயிரத்து 560 ரூபாயும் காணிக்கையாக கிடைத்தது... ஆனால் சற்று வித்தியாசமாக கடிதம் ஒன்றும் சிக்கியது... அதில் பக்தை ஒருவர் தனது மரணத்திற்குக் காரணமானவர்களைக் காளி தான் தண்டிக்க வேண்டும் என்றும், அதுவும் தன் கண்முன்னே நடக்க வேண்டும் எனவும் மனம் வெம்பி எழுதியிருந்தார்... கணவரை இழந்ததால் அப்பெண் எந்தளவு மன உளைச்சலுக்கு ஆளாகி அம்மனிடம் முறையிட்டிருப்பார் என்று கடிதத்தின் மூலம் தெரிய வந்த நிலையில், இக்கடிதத்தைப் படித்த அதிகாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்...