"வரும் 21ம் தேதி...சூறாவளிக்காற்று வீசக்கூடும்" - வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு

Update: 2024-06-17 10:16 GMT

"வரும் 21ம் தேதி...சூறாவளிக்காற்று வீசக்கூடும்"

வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு

21ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் சென்னை, புறநகர் பகுதிகளில் நகரின் ஒருசில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் இடி மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய தென் தமிழக கடலோரம், மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக் கடல், வடக்கு, தெற்கு வங்கக் கடல், கர்நாடக கடலோரம் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்