தென் மாவட்டங்களில் உள்ள 256 கல்லூரிகளில்.. நெல்லை சரக டி.ஐ.ஜி அதிரடி ஏற்பாடு

Update: 2024-11-04 14:07 GMT

போதை இல்லா தமிழகத்தை உருவாக்கும் தமிழக முதலமைச்சரின் சிறப்பு செயல் திட்டத்தின் அடிப்படையில், நெல்லை காவல்துறை சரகத்திற்குட்பட்ட 256 கல்லூரிகளில் போதை தடுப்பு குழுக்கள் அமைக்கக்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள 58 கல்லூரிகளின் போதை தடுப்பு குழுக்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு போதை பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. நெல்லை காவல் சரகத்தில் இருக்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு குழுக்கள் செயல்படும் என நெல்லை சரக டி.ஐ.ஜி மூர்த்தி தெரிவித்தார். நெல்லை சரகத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகள் முன்பு போதை தடுப்பு நடவடிக்கைக்காக, காலை, மாலை இரண்டு வேலைகளிலும் சிறப்பு ரோந்து பணிகளும் நடைபெறுவதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்