பர்லியார் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் ஆடர்லி - ஹில்குரோ இடையே மலை ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு தண்டவளத்தில் பாறைகள் விழுந்துள்ளதால் இன்று மேட்டுப்பாளையம் உதகை இடையிலான அனைத்து மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் முடிந்து கனமழை பெய்யாத பட்சத்தில் நாளை ரயில் இயக்கப்படும் என்றும், கனமழை தொடர்ந்தால் நாளையும் ரயில் சேவை ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.