மருத்துவமனைக்கு வந்த 9 வயது நாகர்கோவில் சிறுமி - ரிப்போர்ட்டை பார்த்ததும் அதிர்ந்த மருத்துவர்கள்
மருத்துவமனைக்கு வந்த 9 வயது நாகர்கோவில் சிறுமி - ரிப்போர்ட்டை பார்த்ததும் அதிர்ந்த மருத்துவர்கள்
ஜப்பானிய மூளைக்காய்ச்சல் அறிகுறியுடன் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நோய் தாக்குதலை உறுதி செய்வதற்காக அவரது ரத்தம் மற்றும் முதுகு தண்டுவடத்திலுள்ள திரவ மாதிரிகள் சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. சிறுமிக்கு உடல்நிலை திருப்திகரமான நிலையில் இருந்தாலும் அவரை தனிக்கவனம் செலுத்தி கண்காணித்து வருவதாக மருத்துவர்கள் கூறினர்.