விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் வாக்கு பதிவு - தபால் வாக்குப்பதிவு தொடக்கம்
நெல்லையில் வீட்டிலிருந்து வாக்களிக்க விருப்பம் தெரிவித்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் அதிகாரிகள் தபால் வாக்குப்பதிவு பெற்று வருகின்றனர்.
ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 656 மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு சென்று அதிகாரிகள் தபால் வாக்குகளை பெறும் பணியில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணத்தில் வசிக்கும் 101-வயது மூதாட்டி, தனது இல்லத்தில் இருந்தபடி அதிகாரிகள் முன்னிலையில் தபால் வாக்களித்தார்.
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமாநல்லூர், காளிபாளையம், கணக்கம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று தபால் வாக்கு பதிவு பெறப்பட்டது.