கேரளாவில் பூச்சிக்கொல்லி கலந்த ஏலக்காயுடன் தயாரித்த அரவணை பாயச டின்களை அழிக்க தேவசம் போர்டு டெண்டர் கோரியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழங்கப்படும் அரவணை பாயசத்தில் பூச்சிக்கொல்லி கலந்த ஏலக்காய் பயன்படுத்தி இருப்பது தெரியவந்ததால் உற்பத்தி நிறுத்தப்பட்டது. எனினும், ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட 6.65 லட்சம் டின் அரவணை பாயசத்தை அறிவியல் பூர்வமாக அழிப்பதற்கான டெண்டரை தேவசம் போர்டு வெளியிட்டுள்ளது. சபரிமலையில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால், அரவணையை பம்பைக்கு வெளியே கொண்டு சென்று அழிக்க வேண்டும் என்றும், அரவணை டின்களில் ஐயப்பன் படம் இருப்பதால், நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அழிக்க வேண்டும் என்றும் தேவசம் போர்டு கூறியுள்ளது.