"உயிர கையில புடிச்சிட்டு இருக்கோம்" கடலோர கிராமத்திற்கு காத்திருக்கும் பயங்கர ஆபத்து - பதறும் மக்கள்

Update: 2024-07-19 13:00 GMT

கன்னியாகுமரி மாவட்டம் கேசவன் புத்தன்துறை ஊராட்சியில், கடல் அரிப்பால், வீடுகள் இடியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடல் பகுதியில் தொடர்ந்து கடல் சீற்றம் காணப்படுகிறது. கடல் அலைகள் ஆக்ரோஷத்துடன் கரையை நோக்கி வருவதால் கடல் அரிப்பும் ஏற்படுகிறது. இதனால், கேசவன் புத்தன் துறை ஊராட்சியில், கடற்கரையோரம் உள்ள வீடுகளில் மதில் சுவர்கள் இடிந்து வருகின்றன. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியின் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்