பெண் வழக்கறிஞர்கள் மகாபாரத பாஞ்சாலி போலவும், சிலப்பதிகார கண்ணகி போலவும் செயல்பட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், புதிய சட்டக்கல்லூரி கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய ப. சிதம்பரம், சட்டக்கல்லூரி மாணவர்களை நோக்கி, முதல் பெண் வழக்கறிஞர் யார் என கேள்வி எழுப்பினார். யாரும் பதிலளிக்காத நிலையில், 2 ஆயிரத்து 449 ஆண்டுகளுக்கு முன் மகாபாரதத்தில் இருந்த பாஞ்சாலிதான் முதல் பெண் வழக்கறிஞர் என்றும், ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் இருந்த சிலப்பதிகாரத்தில் இருந்த கண்ணகி இரண்டாவது வழக்கறிஞர் என்றும் தெரிவித்தார். இதனைக் கேட்டு, அரங்கமே கைகளை தட்டி ஆரவாரம் செய்தது. பெண் வழக்கறிஞர்கள் பாஞ்சாலி போலவும், கண்ணகி போலவும் செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.