கோவையில் பள்ளிக்கு வெடி குண்டு மிரட்டல் விவகாரம் - வெளியான முக்கிய தகவல்

Update: 2024-03-19 03:44 GMT

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளன. இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி பா.ஜ.க. சார்பில், பிரதமர் மோடி கோவையில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், ராமாநாதபுரத்தில் உள்ள தனியார் பெண்கள் பள்ளியில் குண்டு வெடிக்க உள்ளதாக, மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் அழைப்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதனையில், அது போலியான அழைப்பு என தெரிய வந்தது. தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்