`பாதாள சாக்கடை குழி தவறிவிழுந்த பெண்' - மாநகராட்சி ஆணையர் அதிரடி

Update: 2024-06-18 14:46 GMT

பாதாள சாக்கடை குழியில் பெண் விழுந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரருக்கு 50 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கோவை 100 அடி சாலையில் பாதாள சாக்கடை குழியின் மேல் மூடி மூடப்படாமல் இருந்ததால் பெண் ஒருவர் தவறி விழுந்தார். பெண் குழிக்குள் விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரவியநிலையில் மாநகராட்சி அதிகாரிகள் அனைத்து பாதாள சாக்கடை குழிகளையும் சரிபார்த்து மூடினர். இந்நிலையில் பாதாள சாக்கடை குழியை பராமரிக்காத ஒப்பந்தக்காரருக்கு ரூபாய் 50 ஆயிரம் அபராதம் விதித்தும், விளக்கம் கேட்டு உதவி செயற்பொறியாளருக்கு கடிதம் அனுப்பியும் மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்