பொதுகூட்டத்தை பாதியில்விட்டு சென்ற ராகுல் காந்தி - வெளிவந்த பின்னணி

Update: 2024-05-19 17:30 GMT

புல்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பாடிலாவில் நடந்த பொதுக்கூட்டத்தில், கட்டுக்கடங்காத வகையில் தொண்டர்கள் குவிந்திருந்தனர். அப்போது காங்கிரஸ் மற்றும் சமாஜவாதிகட்சித் தொண்டர்கள் கட்டுப்பாட்டை மீறி மேடைக்கு வர முயன்றனர். அகிலேஷும், ராகுல் காந்தியும் கட்சித் தொண்டர்களை அமைதி படுத்த பலமுறை வேண்டுகோள் விடுத்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசாரும், பாதுகாப்பு படையினரும் போராடினர். இருப்பினும் தொண்டர்கள் தடுப்புகளை தாண்டி மேடையை நோக்கி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து,பொதுக்கூட்டத்தில் இருந்து ராகுல் காந்தியும், அகிலேஷ் யாதவும் பேசாமல் வெளியேறினர்.

Tags:    

மேலும் செய்திகள்