ரத்தான இலவச மின் இணைப்பு... `EB'க்கே `கடுக்கா' கொடுத்த அதிகாரிகள்... புலம்பி நிற்கும் விவசாயிகள்
அங்குள்ள காசிதர்மம் கிராமத்தில், இலவச மின் இணைப்பு வழங்குவதாக கூறி விவசாயிகளிடம் பணம் பெற்று மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான விசாரணை நடத்திய மின்வாரியம், உதவி மின் பொறியாளர் முகமது ரபிக், கணக்கு மேற்பார்வையாளர் முருகேசனை பணி இடைநீக்கம் செய்துள்ளது. முறைகேடாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இலவச மின் இணைப்பை மின்வாரிய ஊழியர்கள் துண்டித்துள்ளனர். இதனால் கோபம் அடைந்த விவசாயிகள், கடைநல்லூர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.