தமிழகத்தில், டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி, மதுபானம் வாங்கும் முறை அமல்படுத்தப்பட உள்ளது.
டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் வாங்கும் மது பானங்களுக்கு டிஜிட்டல் முறையில், QR CODE பணம் செலுத்தி மது விற்பனை செய்யும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக, சென்னை,கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் சோதனை அடிப்படையில் 300- க்கும் மேற்பட்ட கடைகளில் நவம்பர் மாதம் முதல் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தினை செயல்படுத்தவும் தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. இதையொட்டி, டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் கணினி மயமாக்கல் பணிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும், அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மூன்று பிளக் பாயிண்ட்கள் கொண்ட சுவிட்ச் போர்டுகள் அமைக்கவும், கடை பணியாளர்கள் பயன்படுத்தும் சிம் கார்டுகள் மற்றும் நெட்வொர்க் தொடர்பான விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.