வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி - 13ஆம் தேதி வரை.. வானிலை மையம் சொன்ன தகவல்

Update: 2024-09-08 04:30 GMT

தமிழகம் மற்றும் புதுவையில் வருகிற 13ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது இன்று வடமேற்கு பகுதியில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்