நடப்பாண்டில் தமிழ்க் கட்டாயப் பாடமாக இல்லாமல் போனதற்கு அரசின் அலட்சியமே காரணமென பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
தமிழக அரசு, நடப்பாண்டில் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும் என்பதில் இருந்து ஓராண்டு விலக்கு அளித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ் கட்டாயப் பாட சட்டம் இயற்றப்பட்டு 18 ஆண்டுகள் ஆகியும் தமிழாசிரியர்களை நியமிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழை பாடமாக்க அரசு காட்டும் ஆர்வம் இவ்வளவுதான் என விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அடுத்த ஆண்டு முதலாவது இந்த சட்டத்தை தமிழக அரசு நடைமுறை படுத்த வேண்டமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.