தனக்கு நீதி கிடைக்கும் வரை தனது போராட்டம் தொடரும் என சுவாதி மாலிவால் தெரிவித்துள்ளார்...
ஆம் ஆத்மி எம்.பி. சுவாதி மாலிவால் கடந்த 13ம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்ற போது அவரது உதவியாளர் தாக்கியதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து உதவியாளர் பிபவ் குமார் கைது செய்யப்பட்டார். தான் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள சுவாதி மாலிவால், கட்சியின் மூத்த தலைவர் ஒருவரிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், அவர்கள் எல்லோருக்கும் தன்னைப் பற்றி அசிங்கமாக பேச, தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு கொச்சைப்படுத்த அழுத்தம் தரப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்... தன்னை ஆதரிப்பவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என கூறப்படுவதாகத் தெரிவித்த சுவாதி மாலிவால், தான் தனது சுயமரியாதைக்கான போராட்டத்தைத் துவங்கியுள்ளதாகவும் நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்... இந்த சண்டையில் முற்றிலும் தான் தனியாக இருந்தாலும் கைவிடப் போவதில்லை எனவும் சுவாதி மாலிவால் குறிப்பிட்டுள்ளார்.