ஜாபர் சேட் வழக்கு - அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

Update: 2024-08-29 02:09 GMT

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாபர்சேட் மீதான வழக்கு, செப்டம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி

ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஜாபர் சேட் தாக்கல் செய்த மனு மீது, அமலாக்கத்துறை மீண்டும் வாதங்களை முன்வைக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாபர் சேட் மீதான விவகாரத்தில் சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் நடந்துள்ளது என எவ்வாறு முடிவுக்கு வந்தீர்கள் என்பது உள்ளிட்ட வாதங்களை முன்வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து, விசாரணையை செப்டம்பர் மூன்றாம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் அமலாக்கத்துறை வாதம் முடிந்த பின்னர் அன்றைய தினமே உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்