சென்னை மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த 'நம்ம சென்னை' செல்ஃபி பாயிண்ட் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராணி மேரி கல்லூரி அருகே இருந்த நம்ம சென்னை செல்ஃபி மேடை ஒரு கிலோமீட்டர் தள்ளி பாரத சாரண சாரணியர் அலுவலகம் எதிரே தற்போது மாற்றப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்காக 'நம்ம சென்னை' செல்ஃபி மேடை இடமாற்றம் செய்யப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.