வேலூரில் திடீரென பெய்த கனமழையால், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.
வேலூர் மாநகரில் சத்துவாச்சாரி, வள்ளலார், கிரீன் சர்க்கிள், காட்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்நிலையில், வசந்தம் நகர் முதல் தெருவில் மழைநீர் வெளியேற போதிய வசதி இல்லாததால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனை வெளியேற்றும் வேளையில் குடியிருப்பு வாசிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதால் அப்பகுதிமக்கள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர். ஒரு சில வீடுகளில் பாம்பு, பூச்சி ஆகியவையும் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உரிய மழைநீர் வடிகால் ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.