கல்லூரியில் பேசி கொண்டிருக்கும் போதே பிரிந்த மாணவி உயிர் - சென்னையில் அதிர்ச்சி
கோவிலம்பாக்கத்தை சேர்ந்த தேவேந்திரன் விமான நிலையத்தில் மருத்துவ உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் மோகனலட்சுமி, சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஎஸ்சி மருத்துவ உதவியாளர் படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த மாணவி, திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....