ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தின் மீதான பதிலுரையில், ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு உள்ளிட்ட பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். இது தொடர்பான கருத்துருக்களை பரிசீலித்த தமிழக அரசு, இந்த 3 பேரூராட்சிகளும் மக்கள் தொகை 30 ஆயிரத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்ற அளவுகோலை பூர்த்தி செய்யாவிட்டாலும், சராசரி வருமானம் என்ற அளவுகோலை பூர்த்தி செய்துள்ளதை கணக்கில் எடுத்துக் கொண்டது.மேலும், 3 பேரூராட்சிகளின் வரலாறு, சுற்றுலா ஆகியவற்றின் முக்கியத்துவம், வர்த்தகம் போன்ற தொழில் பெருக்கத்தை கருத்தில் கொண்டும் அவற்றை நகராட்சிகளாக தரம் உயர்த்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதற்கான ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின், ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியிட்டார்.