ஸ்ரீபெரும்புதூரில் வடமாநில தொழிலாளர்களுக்கு நடந்த சம்பவம்... உயிரை பிடித்து ஓடிய அதிர்ச்சி

Update: 2024-09-03 07:03 GMT

காஞ்சிபுரத்தில் வடமாநில தொழிலாளிகளை பீர் பாட்டிலால் தாக்கி பணம் பறிக்க முயன்ற இரண்டு சிறார்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் கிராமத்தில் இரண்டு வட மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், கண்டிகை பகுதியில் உள்ள முந்திரி தோப்பிற்குள் இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு இருந்த 4 பேர், இருவரையும் பீர்பாட்டிலால் தாக்கி விட்டு பணம் பறிக்க முயன்றனர். இந்நிலையில், வடமாநில தொழிலாளிகள் இருவரும் தப்பி ஓடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, குற்றச்செயலில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இரண்டு பேர் சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்