பழசை கிளறி மக்களுக்கு நெஞ்சில் நெருப்பை மூட்டிய ரணில்.. பரபரப்பாகும் இலங்கை தேர்தல்

Update: 2024-08-26 07:24 GMT

இலங்கையில் இனத்தையும், மதத்தையும் முன்னிலைப்படுத்தி தாம் ஒருபோதும் அரசியல் செய்வதில்லை என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அக்கறைப்பற்று நீர்ப்பூங்காவில் நடைபெற்ற தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பேசிய அதிபர் ரணில் விக்ரமசிங்க, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்நாட்டு பிரச்சனையில் சிக்கி தவித்த இலங்கையில் தாம் அதிபர் பொறுப்பேற்று நாட்டு மக்களின் பசியை போக்கியதாகக் கூறினார். 2 ஆண்டுகளை கடந்து விட்டதால் மக்கள் அந்த துன்பங்களை மறந்திருக்க கூடும் என்றும், எனினும், அத்தகைய நிலைக்கு நாடு மீண்டும் செல்லாமல் இருக்க மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பொத்துவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்றார். பின்னர்

Tags:    

மேலும் செய்திகள்