#Breaking|| "ஆளுநருக்கு எதிராக சிறப்பு சட்டப்பேரவை கூட்டம்" - பாஜக எடுத்த திடீர் முடிவு

Update: 2023-11-17 06:31 GMT

ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வரும் சூழலில், நீண்ட காலமாக மசோதாக்களை நிறைவேற்றாமல் கால தாமதம் செய்வதாக உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இதற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்ததோடு, வழக்கை வருகிற 20ஆம் தேதி விசாரிப்பதாக அறிவித்திருந்தது. இந்த சூழலில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த துணைவேந்தரை மாநில அரசே நியமனம் செய்வதற்கான பல்கலைக்கழக திருத்த மசோதாக்களை தலைமை செயலகத்திற்கு ஆளுநர் மாளிகை திருப்பி அனுப்பியது. இவற்றை எந்த திருத்தமுமின்றி நிறைவேற்றும் விதமாக, நாளை சனிக்கிழமையன்று சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்