சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடித்திருவிழா.. நெல்லையில் இறங்கிய முக்கிய அதிகாரிகள்
நெல்லையில் பிரசித்திபெற்ற சொரிமுத்து அய்யனார் கோயில் திருவிழா ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை சொரிமுத்து அய்யனார் கோயிலில், ஆடி அமாவாசை திருவிழாவில், பக்தர்கள் குடில் அமைத்து வனப்பகுதியில் இரவில் தங்கி, விழா நிகழ்வுகளில் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு இத்திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள வனத்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. வனப்பகுதியில் தங்குவதற்கு 5 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வனத்துறை திடீரென உத்தரவை மாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். ஆடி அமாவாசை அன்று, 3 லட்சத்திற்கும் அதிகமானோர், சுவாமி தரிசனம் செய்வர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விழாவை அமைதியாக நடத்தவும், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் ஆகியோரை ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக நியமித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.