சூரியசக்தி மின் கணக்கெடுப்பு மீட்டருக்கு கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
வீடுகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் மேற்கூரையில்
சூரியசக்தி மின் உற்பத்தி பேனல்கள் அமைக்கப்படுவது
பரவலாகியுள்ளது. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை,
கட்டிட உரிமையாளர் பயன்படுத்தியது போக, உபரியை மின்
வாரியத்திற்கு விற்க முடியும். ஆனால் சூரிய சக்தி மின் உற்பத்தி நடைபெறாத இரவு மற்றும் மழை காலங்களில் மின் வாரியத்தின் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டி உள்ளது. சூரியசக்தி மின்சார உற்பத்தியில், மின் வாரியத்திற்கு அளிக்கப்பட்ட அளவையும், மின் வாரிய மின்சாரத்தை பயன்படுத்திய அளவையும் துல்லியமாக கணக்கிட, இரு திசை மீட்டர்களை மின் வாரியம் பொருத்துகிறது.
இந்நிலையில் ஒருமுனை இணைப்பிற்கான இரு திசை மீட்டரின் விலை 2 ஆயிரத்து 764 ரூபாயாகவும், மும்முனை இணைப்பிற்கு 5 ஆயிரத்து 11 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தாழ்வழுத்த பிரிவில் இடம்பெறும் தொழில் நிறுவனங்களுக்கான மீட்டர் கட்டணம் 10 ஆயிரத்து 720 ரூபாயாக நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது.