"ஒரு நாளைக்கு ஒரு முறை கட்டாயம் சிரிக்க வேண்டும்" - திடீர் சட்டத்தால் கடுப்பான மக்கள் | Japan Smile

Update: 2024-07-12 04:42 GMT

ஒரு நாளைக்கு ஒரு முறை கட்டாயம் சிரிக்க வேண்டும் என ஜப்பானில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. யமகட்டா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி சிரிப்பதால் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களின் தாக்கம் வெகுவாக குறைந்தது தெரியவந்தது. அதனை அடிப்படையாக வைத்து, கட்டாயம் ஒரு நாளைக்கு ஒரு முறை சிரிக்க வேண்டும் என்ற சட்டத்தை ஜப்பான் அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சிரிப்பது என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம் என்றும் அதனை சட்டத்தால் கட்டாயப்படுத்த கூடாது என்றும் ஒருசாரர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்