"Bank-க்கே போனதில்லை; 23 லட்சம் கடன் வாங்குனோமா?" அதிர வைத்த வங்கி.. விழிபிதுங்கி நிற்கும் தொழிலாளி

Update: 2024-05-15 15:14 GMT

சிவகாமி அல்லம்பட்டியை சேர்ந்தவர் செல்வம். கூலித் தொழிலாளியான இவர், கட்டட வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், வறுமையின் பிடியில் சிக்கி குடும்பம் நடத்தி வந்த செல்வம், தனக்கு வந்த தனியார் வங்கியின் நோட்டீஸை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். நோட்டீஸில், போலியான நகைகளை 4 முறை அடமானம் வைத்து 23 லட்ச ரூபாய் வரை செல்வம் கடன் பெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அன்றாட வேலைக்கு செல்லும் தங்களிடம் ஏது நகை என கூறி வங்கிக்கு வந்த செல்வம் அதிகாரியை முற்றுகையிட்டு இது குறித்து விளக்கம் கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்