"நீங்க தலைவர் இருக்கையில் அமர கூடாது.." ராஜினாமா செய்ய துணிந்த ஊராட்சிமன்ற தலைவர்

Update: 2024-05-15 03:33 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்துள்ள முதுவன் திடலை சேர்ந்தவர் கெளரி மகாராஜன். முதுவன் திடல் ஊராட்சிமன்ற தலைவரான இவரை, ஊராட்சி செயலாளரான ராஜ்குமார் சாதி பெயர் கூறி திட்டி, தலைவர் இருக்கையில் அமரக்கூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ராஜ்குமாரை தொடர்பு கொண்ட போது, தான் எந்த முறைகேட்டில் ஈடுபடவில்லை என்றும் தன் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுக்கள தவறானவை என தெரிவித்தார். மேலும், ராஜ்குமார் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கி பணியிட மாற்றம் செய்யப்பட்டதும், இறுதியாக முதுவன் திடல் ஊராட்சி செயலாளராக நியமிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஊர் மக்கள் சுமார் 50 பேருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கௌரி மகாராஜன், ராஜ்குமார் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்து இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்