சிவகங்கையை நடுங்கவிட்ட கொலை சம்பவம்.. 2 ஆண்டுகளுக்கு பின் 9 பேர் கைது.. அதிர்ச்சி வாக்குமூலம்
சிவகங்கை அருகே வடமாநில தொழிலாளி கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தில் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் 9 பேர் பிடிபட்டுள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம், சிவகங்கை அடுத்துள்ள கீழக்குளம் நெம்மேனி அருகே உடையனை கண்மாய்க்குள் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட ரமேஷ், நித்திஷ், செந்தில்குமார், சக்திவேல், கோபி, மோகன்ராஜ், வெங்கடேஷ், யாசின், தவமணி ஆகிய 9 பேரை, 2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கைது செய்துள்ளனர். பிரிக்ஸ் கம்பெனி நடத்தி வரும் ரமேஷ் அளித்த வாக்குமூலத்தில் பீகாரைச் சேர்ந்த கிருஷ்ணா சிங் மற்றும் சரத் ஆகியோர் வேலைக்கு சேர்ந்தபின் தனது கம்பெனியில் திருடியதாகவும், சரத் தப்பி ஓடிய நிலையில் கிருஷ்ணா சிங்கை கட்டி வைத்து தாக்கியபோது அவர் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார். இதனால் அவரது உடலை டீசல் ஊற்றி எரித்ததாகவும் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.