குழந்தையை மாற்ற முயன்ற செவிலியர்..! கதறி அழுத தாய்..! வெளிச்சத்திற்கு வந்த உண்மை

Update: 2024-11-04 15:46 GMT

சிவகங்கை அரசு மருத்துவமனையில் குழந்தை மாற்றப்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இளையான்குடி சாலை கிராமத்தை சேர்ந்த செல்விக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஐ.சி.யூ.வில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த செல்வியிடம் இரண்டரை மணி நேரம் கழித்து வருமாறு கூறியிருக்கிறார். அப்படி இரண்டரை மணிநேரம் கழித்து சென்ற செல்வி, குழந்தை இல்லாததை கண்டு கதறி அழுதுள்ளார். உடனடியாக செவிலியர்கள் மற்றொரு பெண்ணிடம் இருந்து பெண் குழந்தையை எடுத்து வந்து கொடுத்ததாக குற்றம் சாட்டியிருக்கிறார்கள். வாக்குவாதத்திற்கு பிறகு அவரிடம் ஆண் குழந்தை கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் ஆண் குழந்தைக்கு பதிலாக பெண் குழந்தையை வைத்து குழந்தை மாற்றம் செய்ய முயற்சி செய்தார்களா? எனவும் கேள்வியை எழுப்பியுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்