பிரியாணி பிரியர்களுக்கு ஷாக்..சென்னையில் அதிரடி காட்டும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்
சென்னையில் பல்வேறு கிளைகளை கொண்டு
இயங்கி வரும் பிரபல பிரியாணி நிறுவனத்தின்
கொடுங்கையூர் மற்றும் பொன்னேரியில்
இயங்கி வரும் கிளைகளில் பிரியாணி வாங்கி
சாப்பிட்ட பலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு
மருத்துவமனையில் அனுமதிப்பட்டனர்.
இது குறித்த புகால்களின் பேரில் செங்குன்றம்
அருகே அலமாதி பகுதியில் அமைந்துள்ள
அந்நிறுவனத்தின் உணவு தயாரிக்கும் கிடங்கில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். அதனை படம் பிடிக்க உள்ளே செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆய்வுக்கு பின்
செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள்
உணவு பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக
கடைபிடிக்க அறிவுறுத்தியதாக தெரிவித்தனர்.