முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு 19-ந் தேதி வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
இந்த வழக்கில், ஏற்கனவே அரசு தரப்பு வக்கீல் வாதம் முடிந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேரின் சார்பில், அவர்களது வழக்கறிஞர்கள் ஆஜராகி, ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரி வாதிட்டனர். வாதங்களை கேட்ட மாவட்ட நீதிபதி பூர்ணிமா, இம்மனு மீதான உத்தரவு வரும் 19-ந் தேதி பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டார்