எடப்பாடி அருகே அரசு துவக்கப்பள்ளி ஒன்றில், மாணவர்கள் பள்ளிக்கு வராததால், கற்றல்,கற்பித்தல் செயல்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
எடப்பாடியை அடுத்த பொன்னாக்கவுண்டனூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்,
மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, 8 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வந்தனர்.
இந்நிலையில், ஜூலை 15 முதல் மாணவர்கள் வருகை முற்றிலும் நின்றதால், பள்ளி மூடப்பட்ட நிலையில் உள்ளது.
பள்ளியின் சுவற்றில் கற்றல், கற்பித்தல் உள்ளிட்ட செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.
மாணவர்கள் அனைவரும் திடீரென தனியார் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
புதனன்று 3 மாணவர்கள் மட்டும் வந்துள்ள நிலையில், பள்ளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வியாழன் முதல் காலை உணவு திட்டம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது