சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அருந்ததியர் இன மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை, மாற்று சமுதாயத்தினர் ஆக்கிரமிக்க முயன்றதை தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாரகலூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான 5.50 ஏக்கர் நிலம் அருந்ததியர் இன மக்களுக்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாற்று சமுதாயத்தினர் அந்த இடத்தை சீரமைத்து ஆக்கிரமிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அதனை தடுத்து, அருந்ததியின மக்களும் குடிசை அமைக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலின் பேரில் விரைந்த போலீசார், அரசு ஒதுக்கீடு செய்த பிறகு வீடு கட்டலாம் என கூறி அனுப்பி வைத்தனர்.