சூடுபிடிக்கும் இலங்கை தேர்தல்...ரணிலின் மாஸ்டர் பிளான்.. பரபரக்கும் களம்

Update: 2024-09-16 08:26 GMT

இலங்கையின் மிகப்பெரிய பொருளாதார, அரசியல் மற்றும் சமூக புரட்சியை அடுத்த 5 ஆண்டுகளில் நிகழ்த்துவோம் என, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கை அதிபர் தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது.

மலையக தமிழர்கள் அதிகம் வாழும் நுவரெலியாவில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் ரணில் விக்ரமசிங்க, அதிகாரத்தைப் பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை அளித்து, நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க நினைக்கும் தலைவர்களை அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டார். எதிர்கட்சியினர் மக்களை வாழவைப்பது குறித்து சிந்திக்கவில்லை என்றும், தேர்தல் காலத்தில் மட்டுமே மக்களிடம் வருகிறார்கள். அவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா? என்றும் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார். எதிர்கட்சியினர் சர்வதேச நாணய நிதியத்துடன் பேசுவோம் என்று சொல்வதாகவும், இதுவரையில் எவரும் பேசியதில்லை என்றும் குற்றம் சாட்டினார். இறக்குமதி பொருளாதாரம், விவசாய நவீனமயமாக்கல், சுற்றுலாத்துறையை இரட்டிப்பாக்கல், டிஜிட்டல் பொருளாதாரம், பசுமை பொருளாதாரத்தை பலப்படுத்துவதே புரட்சிகர மாற்றங்களுக்கு வித்திடும் என்றும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்