23ம் தேதி உருவாகும் புதிய புயல்.. தமிழகத்தை தாக்குமா? - அலர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்
23ம் தேதி உருவாகும் புதிய புயல்.. தமிழகத்தை தாக்குமா? - அலர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்
வங்கக் கடலில் நாளை மறுநாள் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நாளை மறுநாள் புயலாக வலுப்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புயல் ஒடிசா - மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாக உள்ள புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது. இதனிடையே, வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், 23ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது