குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் - கொள்ளை சம்பவத்தை தடுக்கும் காவல் சாமிகள்

Update: 2023-12-18 02:18 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் மாநகரின் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி குடியிருப்புகளை சூழ்ந்துள்ள நிலையில் பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி விட்டனர் ஆயினும் ஒரு சில குடும்பங்கள் தங்கள் பொருட்களை அங்கே வைத்துவிட்டு வீடுகளில் இருந்து வெளியேற தயக்கம் காட்டி வருகின்றனர் தரைத்தளத்தில் மழை நீர் புகுந்தாலும் மாடியில் தங்கி உள்ளனர் அவர்களை வெளியேறுமாறு வருவாய்த்துறை அதிகாரிகளும் போலீசாரும் பலமுறை அறிவுறுத்தியும் அவர்கள் வெளியேறாத நிலையில் அந்தப் பகுதிகளில் போலீசார் இரவு நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் இதற்கிடையே குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் மின்சாரம் மூலம் எவ்வித ஆபத்தும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக 150 க்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட அந்த பகுதியில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்த நிலையில் காணப்படுகிறது இதற்கிடையே அந்த பகுதியில் உள்ள வீடுகளில் திருடன் புகுந்து விடக்கூடாது என்பதற்காகவும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்