அரசு அதிகாரியை கொலை செய்ய முயற்சி... அதிர்ந்து போன கலெக்டர் அதிரடி உத்தரவு
புதுக்கோட்டையில், மணல் கடத்தலின் போது, அரசு அதிகாரியை கொலை செய்ய முயற்சித்த 2 பேரை குண்டாஸில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே, கடந்த மாதம் 16ஆம் தேதி, மணல் கடத்தல் சம்பவம் நடந்தது. இந்த கடத்தலில் ஈடுபட்ட லாரியை, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி, தடுத்து நிறுத்த முயன்றார். அப்போது மணல் கடத்தல்காரர்கள் வருவாய் கோட்டாட்சியரை கொலை செய்ய முயற்சித்தனர். இதில், லாரி உரிமையாளர் சுந்தரம் மற்றும் ஓட்டுநர் சங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா உத்தரவிட்டுள்ளார்.